search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் மாநிலத்தில் தனிக்கட்சி தொடங்கினார் சங்கர்சிங் வகேலா
    X

    குஜராத் மாநிலத்தில் தனிக்கட்சி தொடங்கினார் சங்கர்சிங் வகேலா

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சங்கர்சிங் வகேலா கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். பா.ஜ.க. தலைவர்கள் புடைசூழ தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் இணைந்து வகேலா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சிக்கு 'ஜன் விகால்ப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்சி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் மக்களுக்கான மாற்றம் எனவும் அவர் கூறினார்.

    மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்கள் அரசியல் முன்னணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- 

    செப்டம்பர் 21ம் தேதி அம்பாஜி கோவில் இருந்து எங்கள் பிரச்சாரத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சென்று எங்கள் புதிய அரசியல் முன்னணி குறித்து எடுத்து கூறுவோம். வாக்குக்காக நான் பிச்சை எடுக்கமாட்டேன். பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என மக்கள் நினைத்தால் நாங்கள் ஒரு மாற்றாக இருப்போம். 

    எங்கள் பிரச்சாரம் சரியானதாக இருக்கும். நாங்கள் யாரையும் தாக்கி பேச மாட்டோம். ஆனால் தற்போதைய ஆட்சியையும், எதிர்க்கட்சியையும் விமர்சிப்போம். 

    டெல்லி ஒரு சிறந்த உதாரணம். மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தனர். அதேபோல் குஜராத்திலும் மூன்றாம் அணிக்கு வாய்ப்பிருக்கிறது. குஜராத்தில் மூன்றாவது அணி வேலைக்கு ஆகாது என்பது கட்டுக்கதை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×