search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை பாகிஸ்தான் எடுத்து கொள்ளட்டும்: மத்திய மந்திரி சர்ச்சை கருத்து
    X

    இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை பாகிஸ்தான் எடுத்து கொள்ளட்டும்: மத்திய மந்திரி சர்ச்சை கருத்து

    இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் ஜைஷ் இ முஹம்மது தலைவருக்கு அதிக விருப்பம் இருப்பதால் அவர்களை பாகிஸ்தான் எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் மத்தியரக தொழில்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெருகிவரும் ஊடுருவல் மற்றும் அங்கு பாகிஸ்தானின் தூண்டுதலால் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இனியும் ஊடுருவல்களை சகித்துகொள்ளும் சக்தி இந்தியாவுக்கு இல்லை என குறிப்பிட்டார்.

    உள்நாட்டின் பாதுகாப்பு கருதி ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த கிரிராஜ் சிங், மனிதநேயம் என்பது சட்டத்தைவிட உயர்ந்தது அல்ல என்று கூறினார்.

    பாகிஸ்தான் அரசின் ஆதரவு பெற்ற ஜைஷ் இ முஹம்மது தலைவர் மசூத் அசாருக்கு ரோஹிங்கியாக்கள்மீது அதிக விருப்பம் இருப்பதால் அவர்களை பாகிஸ்தான் எடுத்து கொண்டால் நல்லதாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகளும் ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×