search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் விசித்திரம்: ஒன்றரை லட்ச ரூபாய் பயிர்க்கடனுக்கு ஒரு பைசா தள்ளுபடி வழங்கிய மாவட்ட நிர்வாகம்
    X

    உ.பி.யில் விசித்திரம்: ஒன்றரை லட்ச ரூபாய் பயிர்க்கடனுக்கு ஒரு பைசா தள்ளுபடி வழங்கிய மாவட்ட நிர்வாகம்

    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பயிர்கடனுக்கு ஒரு பைசா தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

    அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். பயிர்களுக்காக கடன் வாங்கி இருந்த சுமார் 86 லட்சம் விவசாயிகள் இந்த அறிவிப்பால் பயன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை அரசு அளித்து வருகிறது. இதுவரை சுமார் 12 லட்சம் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களில் சில தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. சில விவசாயிகளுக்கு சில ரூபாய்கள் மட்டுமே தள்ளுபடி செய்தற்கான சான்றிதழ் வழங்கியது அனைவரும் அறிந்த விசயம் தான்.

    ஆனால், இப்பொழுது மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தி என்ற விவசாயிக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பயிர்கடனுக்காக ஒரு பைசா தள்ளுபடி செய்வற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
    ஆனால் ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடி செய்யும் தகுதி தனக்கு இருக்கிறது, ஆனால் அரசு ஒரு பைசா தள்ளுபடி செய்துள்ளது என வேதனையுடன் கூறினார்.



    இதுகுறித்து மதுராவை சேர்ந்த மந்தியான ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், "சில தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கின்றன. பத்தாயிரம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்", என கூறினார்.

    அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியைச் சேர்ந்த ஜூகி சிங் என்பவர் கூறியதாவது:-

    அரசுக்கு விவசாயிகளின் எண்ணிக்கை மட்டுமே முக்கியம். அவர்களுக்கு ஒரு பைசாவோ, பத்து பைசாவோ, எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டாலும் அரசுக்கு அது தேவையில்லை. இதுகுறித்து அரசிடம் கேட்டால் உங்களிடம் அற்புதமான சாக்குபோக்குகள் கூறுவார்கள். விவசாய கடன் தள்ளுபடியில் காமெடி செய்ய வேண்டுமென அரசு நினைத்திருந்ததால், அது நடந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×