search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்தாத பாகிஸ்தானிடம் பேசுவதில் அர்த்தமில்லை: ராஜ்நாத்சிங் பேச்சு
    X

    தீவிரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்தாத பாகிஸ்தானிடம் பேசுவதில் அர்த்தமில்லை: ராஜ்நாத்சிங் பேச்சு

    தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதை நிறுத்தாத பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த தெலுங்கா தின விழாவில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒரு சிலர் பரிந்துரை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார். ஆனால், பாகிஸ்தான்
    எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து இந்தியாவை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமுமில்லை.

    பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புவதாக பிரதமர் மோடி கடந்த 2014-ல் அறிவித்தார். நாங்கள் அவர்களை கைகுலுக்குவதற்காக மட்டும் அழைக்கவில்லை. தொடர்ந்து நல்லுறவை நிலைநாட்டவே வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதை மீறிவிட்டனர்.

    இன்று தெலுங்கானா தின விழா நடைபெறுகிறது. இங்கு நாம் ஒரு உறுதிமொழி எடுப்போம். மதம், ஜாதி, மொழியால் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம். அப்படி யாராவது செய்ய முயன்றால் அவர்களை தேச விரோத சக்தியாக கருதுவோம். உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்தியாவை பலவீனப்படுத்த முடியாது என்பதை நான் இங்கு உறுதியுடன் சொல்லிக் கொள்கிறேன்.     

    காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் இந்த தினத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அது எங்கள் கடமையும் கூட. இதில் எந்த அரசியலும் இல்லை. மேலும், பிரதமர் மோடி தெலுங்கானா தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×