search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த திட்டமும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்ததில்லை: நர்மதை அணை திறப்பு விழாவில் மோடி பேச்சு
    X

    எந்த திட்டமும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்ததில்லை: நர்மதை அணை திறப்பு விழாவில் மோடி பேச்சு

    குஜராத்தில் நடைபெற்ற சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, இதுவரை எந்த திட்டமும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்ததில்லை என தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது.

    உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    நர்மதை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள சர்தார சரோவர் அணை திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் போல் உலகில் வேறு எந்த திட்டத்துக்கும் இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்ததில்லை. ஆனாலும், இந்த திட்டத்தை நாம் வெற்றிகரமாக
    முடித்துள்ளோம்.

    சர்தார் சரோவர் அணை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அணை பொறியியல் துறையின் அதிசயமாக விளங்குகிறது

    இந்த திட்டத்தின் தொடக்கத்தில் அணையை பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதனால் பொதுமக்கள் இந்த திட்டத்தையே நிறுத்தி விடும்படி வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவதூறான கருத்துக்களை
    பொருட்படுத்தாமல் நாம் அணையை கட்டி முடித்துள்ளோம்.

    இந்த திட்டத்துக்கு எதிராக மக்களிடம் தவறான முறையில் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. உலக வங்கியும் திட்டத்துக்கு முதலில் நிதி ஒதுக்கியது. அதன்பின்னர், சுற்றுப்புற சூழலை காரணம் காட்டி நிதியை தர மறுத்துவிட்டது.
    ஆனாலும் இந்த மிக பெரிய திட்டத்தை நாமே நிறைவேற்றினோம்.

    பொறியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களால் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு பொறியியல் துறை மாணவரும் இந்த அணையில் இருந்து கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

    நர்மதை அணையில் தேக்கி வைக்கப்படும் நீரால் இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தாகம் தீர்க்கப்படும். அதேபோல் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில எல்லை பாதுகாப்பு படைவீரர்களும் பயனடைவார்கள்.

    எனது பிறந்த நாளில் இந்த அணையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த மத்தியப்பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரராஜே சிந்தியா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×