search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்: சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    X

    குஜராத்: சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியின் குறுக்கே உயரம் அதிகரிக்கப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்பணித்து வைத்தார்.
    அகமதாபாத்:

    குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. 

    உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

    கேவடியா பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் அருகில் உள்ள சாதுபெட் பகுதிக்கு செல்கிறார். அங்கு 182 அடி உயரத்தில் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கும் பணிகளை மோடி பார்வையிட உள்ளார்.

    உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையின் மூலமாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதியும் பெற முடியும்.
    Next Story
    ×