search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் வயதான பெற்றோரை பராமரிக்காத அரசு ஊழியர் சம்பளம் பிடித்தம்: பாஜக அரசு அதிரடி
    X

    அசாமில் வயதான பெற்றோரை பராமரிக்காத அரசு ஊழியர் சம்பளம் பிடித்தம்: பாஜக அரசு அதிரடி

    அசாமில் வயதான பெற்றோரை பராமரிக்காத அரசு ஊழியர் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பா.ஜனதா அரசு சட்டம் நிறை வேற்றி இருக்கிறது.

    கவுகாத்தி:

    எந்த பெற்றோரும் குழந்தையை பாரமாக நினைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வயதான பெற்றோரை பாரமாக கருதுகிறார்கள்.

    அவர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறார்கள். நாடு முழுவதும் முதியோர் இல்லங்கள் பெருகி வருகிறது. ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இதே போல் உடன் பிறந்த மாற்றுத்திறனாளிகளையும், ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறார்கள்.

    வசதியாக வாழ்ந்து கடைசி காலத்தில் ஒருவேளை சோற்றுக்காக திண்டாடும் அவர்களின் வாழ்க்கை துயரமானது.

    இவர்களுக்கு உதவுவதற்காக ஒரு புதிய சட்டத்தை அசாமில் ஆளும் பா.ஜனதா அரசு அதிரடியாக நிறை வேற்றி இருக்கிறது.

    அரசு ஊழியர்கள் தங்களது வயதான பெற்றோர்களையும், மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் உடன் பிறந்தவர்களையும் கைவிட்டு விட்டால் அவர்களின் சம்பளத்தில் மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்த தொகை சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் வழங்கப்படும்.

    மசோதாவை அறிமுகப்படுத்திய மந்திரி ஹேமந்த் பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    அரசு ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டும் என்பது எங்கள் நோக்க மல்ல. ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் சில பெற்றோர்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

    இதே போல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்திலும் பிடித்தம் செய்வது தொடர்பான மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

    Next Story
    ×