search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு: தேர்தல் கமி‌ஷனில் தினகரன் அணி எம்.பி.க்கள் மனு
    X

    பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு: தேர்தல் கமி‌ஷனில் தினகரன் அணி எம்.பி.க்கள் மனு

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்று கோரி தேர்தல் ஆணையர் ஏ.கே.சோதியிடம் தினகரன் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜிலா சத்யநாத், வசந்தி முருகேசன் ஆகியோர் இன்று மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

    இதைத்தொடர்ந்து தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் கடந்த 29-ந் தேதி தேர்தல் ஆணையத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அணி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. பொதுக்குழுவுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா நியமனம் ரத்து, தினகரன் அறிவிப்பு செல்லாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் செல்லாது என்று கோரி தேர்தல் ஆணையர் ஏ.கே.சோதியிடம் தினகரன் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜிலா சத்யநாத், வசந்தி முருகேசன் ஆகியோர் இன்று மனு அளித்தனர்.
    Next Story
    ×