search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் இந்தியாவை தவறாக சித்தரிப்பதா? கிரண் ரிஜிஜு வேதனை
    X

    ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் இந்தியாவை தவறாக சித்தரிப்பதா? கிரண் ரிஜிஜு வேதனை

    ரோஹிங்யா அகதிகள் தொடர்பான விவகாரத்தில், இந்தியாவை வில்லனாக சித்தரிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்த இவர்களில் சிலர், கடந்த 2012-ல் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 3.70 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் செய்த் ராவ்ட் உசேன், மியான்மரில் இருந்து ஊடுருவும் ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றும் இந்தியாவின் நடவடிக்கையை விமர்சித்திருந்தார்.

    ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவரின் கருத்துக்கு, மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

    ‘ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் இந்தியாவை வில்லன் போல் சித்தரித்து, கூட்டாக எழுந்து வரும் குரல்கள் சர்வதேச சமுதாயத்தில் இந்தியாவிற்கு உள்ள நன்மதிப்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளன. இதுபோன்ற கருத்துக்கள், இந்தியாவின் பாதுகாப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமையும்’ என்று கிரண் ரிஜிஜு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் சுமார் 14,000 ரோஹிங்யா அகதிகள் தங்கியுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×