search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை - கைலாஷ் சத்யார்த்தி
    X

    நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை - கைலாஷ் சத்யார்த்தி

    இந்தியாவில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் கடத்தல் போன்ற வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் வரை தான் ஓய்வு எடுக்கப்போவதில்லை என கைலாஷ் சத்யார்த்தி கூறினார்.
    சென்னை:

    மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

    நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றை தடுக்கவும் அதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை யாத்திரை நடத்தவும் கைலாஷ் சத்யார்த்தி திட்டமிட்டார்.

    அதன்படி கடந்த திங்கள்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த யாத்திரையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக சென்னையில் இன்று விழிப்புணர்வு யாத்திரை தொடங்கப்பட்டது. உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கைலாஷ் சத்யார்த்தி, ‘நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் ஒழிக்கப்பட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வரை ஓய்வு எடுக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

    மேலும், நாட்டில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் மாயமாகிறார்கள். 6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் மாயமாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் 10 சதவீதம் தமிழ்நாட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தை ஆபத்தில் இருக்கும் போது இந்தியாவும் சேர்ந்து ஆபத்தில் உள்ளது.

    பாரத் யாத்திரையின் முக்கிய நோக்கம் இந்தியாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதாகும். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி டெல்லியில் நிறைவடைகிறது’ என அவர் கூறினார்.


    Next Story
    ×