search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் பெலாரஸ் அதிபர் சந்திப்பு - 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
    X

    பிரதமர் மோடியுடன் பெலாரஸ் அதிபர் சந்திப்பு - 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து

    பிரதமர் மோடி, பெலாரஸ் அதிபர் லுக்காஷேங்கோ சந்திப்பின் போது கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாகவும் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    புதுடெல்லி:

    ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டு அதிபர் லுக்காஷேங்கோ நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    அப்போது இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாகவும் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாகவும் ஆலோசித்தோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

    முன்னதாக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் ஆகியோரை பெலாரஸ் அதிபர் லுக்காஷேங்கோ சந்தித்து பேசினார். 
    Next Story
    ×