search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு கோர்ட்டு தடையை மீறினால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதவி பறிபோகும்: புகழேந்தி பேட்டி
    X

    பெங்களூரு கோர்ட்டு தடையை மீறினால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதவி பறிபோகும்: புகழேந்தி பேட்டி

    பெங்களூரு கோர்ட்டு உத்தரயை மீறி கூட்டம் நடத்தி அதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டால் அனைவர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று புகழேந்தி கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

    சென்னையில் இன்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த பெங்களூரு உரிமையியல் கோர்ட்டு தடைவிதித்துள்ளது. அந்த தடையை மீறி கூட்டம் நடத்தினால் அமைச்சர்கள் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியவர்கள் ஆவார்கள். இதனால் அவர்கள் பதவியை பறிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    வெற்றிவேல் எம்.எல்.ஏ. மேல்முறையீடு செய்த மனு மீது தான் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    ஆனால் பெங்களூரு கோர்ட்டு விதித்த தடை குறித்து சென்னை ஐகோர்ட் டில் நீதிபதிகள் எந்த கருத்தும் கூறவில்லை. அதேபோல பெங்களூரு கோர்ட்டு உத்தரவுக்கு தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே பெங்களூரு கோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவு அப்படியே உள்ளது. அந்த தடையை மீறி பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் கலந்து கொண்டால் அவர்கள் கோர்ட்டு அவமதிப்பை சந்திக்க நேரிடும், அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

    கோர்ட்டு உத்தரவை மீறிய அமைச்சர்கள் பதவியை பறிக்க சட்டத்தில் இடம் உள்ளது. பெங்களூரு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நோட்டீசை சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று காலை ஒட்டினோம்.

    அதை கிழித்து விட்டார்கள். பெங்களூரு கோர்ட்டு உத்தரவு சென்னை தலைமை கழகத்துக்கு இ-மெயில் மூலமும் அனுப்பப்பட்டு உள்ளது. பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் தனியார் திருமண மண்டப மேலாளரிடமும் வழங்கினோம். திருமண மண்டப கதவிலும் கோர்ட்டு உத்தரவு நகலை ஒட்டி உள்ளோம். அமைச்சர்களின் அலுவலகங்களில் இந்த உத்தரவை வழங்கினோம். ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர் இதனால் அமைச்சர்களின் வீட்டு சுவர்களில் ஒட்டி உள்ளோம்.


    இந்த உத்தரவையும் மீறி கூட்டம் நடத்தி அதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டால் அனைவர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    கோர்ட்டு உத்தரவில் கீழமை கோர்ட்டு, வெளி மாநில கோர்ட்டு என்ற பாகுபாடு கிடையாது. எந்த கோர்ட்டு உத்தரவு போட்டாலும் அந்த உத்தரவு செல்லுபடியாகும். அவ்வாறு பார்த்தால் பெங்களூரு கோர்ட்டின் உத்தரவின் படி பொதுக்ழுவிற்கு தடை உத்தரவு நிலுவையில் உள்ளது. இந்த உத்தரவை மீறுவது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும். இந்த உத்தரவை முதல்-அமைச்சரோ, அல்லது அமைச்சர்களோ அல்லது எம்.எல்.ஏ.க்களோ மீறினால் அவர்களின் பதவி பறிபோகும் ஆபத்து உள்ளது.

    கோர்ட்டு உத்தரவை மதிக்கவேண்டியது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமையாகும்.

    பெங்களூரு கோர்ட்டு தீர்ப்புக்கு எந்த கோர்ட்டும் தடை விதிக்கவில்லை. எனவே பொதுக்குழு கூட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை அப்படியே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×