search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று 58-வது நாளாக நூதன போராட்டம்: தமிழக விவசாயிகள் 28 பேர் கைது
    X

    டெல்லியில் இன்று 58-வது நாளாக நூதன போராட்டம்: தமிழக விவசாயிகள் 28 பேர் கைது

    டெல்லியில் இன்று 58-வது நாளாக நூதன போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் 58-வது நாளான விவசாயிகள் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 57 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தமிழக்ததில் கடுமையான வறட்சி, போதிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை, அழிந்துவிட்ட பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வில்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீர் பெற்றுத்தர வில்லை,

    தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம், வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற ஊர்களில் விவசாய நிலங்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக அகற்ற கோரியும் டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் 58-வது நாளான விவசாயிகளின் கோவணத்தை பிரதமர் மோடி அவிழ்ப்பது போன்று சித்தரித்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த டெல்லி போலீசார் பெண்கள் தவிர மற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 28 விவசாயிகளை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.

    அவர்களை கைது செய்ததற்கான காரணம் எதையும் போலீசார் கூறவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களை டெல்லி பாராளுமன்றவளாக போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×