search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்ட மேலவை இடைத்தேர்தல் - உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் மனுதாக்கல்
    X

    சட்ட மேலவை இடைத்தேர்தல் - உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் மனுதாக்கல்

    சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் உள்பட 5 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.பி. யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இதேபோல் மற்றொரு எம்.பி. கேசவ் பிரசாத் மவுரியா, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த மந்திரிசபையில் உள்ள மற்றொரு துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா, மந்திரிகள் மோசின் ரஸா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் சட்டசபையின் இரு அவைகளிலும் இல்லை.

    ஆதித்யநாத் உள்பட 5 பேரும் சட்ட மேலவை எம்.எல்.சி.யாக பதவி ஏற்கும் விதமாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 4 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவரும் தங்கள் எம்.எல்.சி. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    இந்நிலையில் சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் உள்பட 5 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இதற்கான வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது. அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு பிறகு உத்தரபிரதேச சட்ட மேலவையில் இருந்து முதல்-மந்திரி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×