search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிசபையில் சேர நாங்கள் பேச்சு நடத்தவில்லை: நிதிஷ்குமார்
    X

    மத்திய மந்திரிசபையில் சேர நாங்கள் பேச்சு நடத்தவில்லை: நிதிஷ்குமார்

    மத்திய மந்திரிசபையில் சேர நாங்கள் பேச்சு நடத்தவில்லை என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபையில் சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கூட்டணி கட்சிகளை பாரதிய ஜனதா சேர்த்துக் கொள்ளும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த கட்சிகளின் சார்பில் யார்-யாரெல்லாம் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்றும் நேற்று யூகத்தின் அடிப்படையில் பட்டியல்கள் வெளியானது.

    ஆனால் நேற்று பிரதமர் நரேந்திரமோடி மத்திய மந்திரிசபையை விரிவாக்கம் செய்து 9 பேரின் பெயர்களை மட்டுமே அறிவித்தார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் யாரையும் அவர் மந்திரிகளாக அறிவிக்க வில்லை.

    இதையடுத்து மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகள் சேரவில்லை என்பது உறுதியானது. இதுபற்றி சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே கூறுகையில், மந்திரிசபையை விரிவாக்கம் செய்தது குறித்து பா.ஜனதா சார்பில் யாரும் எங்களிடம் பேசவில்லை. டி.வி.யை பார்த்தே மந்திரிசபை விரிவாக்கம் பற்றி தெரிந்து கொண்டேன் என்றார்.

    ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கூறுகையில், மத்திய மந்திரிசபையில் சேர எங்கள் கட்சி சார்பில் பாரதிய ஜனதாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அத்தகைய திட்டமும் இல்லை என்றார்.

    பாரதிய ஜனதாவுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள அ.தி.மு.க.வுக்கும் மந்திரிசபையில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் நிலவும் உள்கட்சி குழப்பம் காரணமாக மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வை சேர்க்க முடியவில்லை.

    Next Story
    ×