search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சீனா செல்கிறார்
    X

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சீனா செல்கிறார்

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சீனாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
    புதுடெல்லி:

    இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள இந்த மாநாட்டில் பேசப்படும்.

    கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் நாளை முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை சீனா புறப்படுகிறார். மாநாட்டின்போது சீன அதிபரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கலாம் எல்லைப்பகுதியில் சீனாவும் இந்தியாவும் படைகளை திரும்ப பெற்று பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட பின்னர், பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்தியா-சீனா பிரதமர் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

    சீனா பயணத்தை முடித்து விட்டு மோடி மியான்மர் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் மோடி ஆலோசனை செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி நாளை சீனா புறப்படுவதற்கு முன்னதாக, மத்திய மந்திரி சபை மாற்றம் செய்யப்பட்டு புதிய மந்திரிகள் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×