search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேரா வன்முறை: அரியானா, பஞ்சாப் வழியாக செல்லும் 15 ரெயில்கள் ரத்து
    X

    தேரா வன்முறை: அரியானா, பஞ்சாப் வழியாக செல்லும் 15 ரெயில்கள் ரத்து

    தேரா சச்சா சவுதா அமைப்பினர் வன்முறையில் ஈடுபடும் பதட்டமான சூழல் நிலவியதால், அரியானா, பஞ்சாப் மாநிலங்கள் வழியாக செல்லும் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே, அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தினர்.

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோன்ற நிலை இன்றும் ஏற்படாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் ஒருசில இடங்களில் வன்முறை நடைபெற்றது.



    பதட்டமான சூழல் நிலவுவதால் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலம் வழியாகச் செல்லும் 13 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இரண்டு கோடைகால சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் ஜோத்பூர்-ஹிசார் பயணிகள் ரெயில் இன்று சூரு வரை இயக்கப்பட்டது. சூரு-ஹிசார் இடையே ரத்து செய்யப்ட்டுள்ளது. ஸ்ரீகங்காநகர்-திருச்சி ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரெயில் பிகானரில் இருந்து இயக்கப்படுகிறது. சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
    Next Story
    ×