search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு வரவேற்கிறது - ரவிசங்கர் பிரசாத்
    X

    ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு வரவேற்கிறது - ரவிசங்கர் பிரசாத்

    தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    ஆதார் வழக்கில், தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டையே சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்து உள்ளது என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியுள்ளார்.

    முழுமையாக தனிநபர் உரிமை கொடுக்க முடியாது, சுதந்திரம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என ரவிசங்கர் பிரசாத் சுட்டிக் காட்டியுள்ளார். 

    மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஆதார் மசோதாவை கொண்டுவந்த போது கூறியதையே, சுப்ரீம் கோர்ட்டு இப்போது உறுதிசெய்துள்ளது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தனிநபர் உரிமையானது அடிப்படையான உரிமையாகும்,” என அவர் கூறியுள்ளார். 

    “சுப்ரீம் கோர்ட்டின் முடிவானது பாசிச சக்திகளுக்கு பெரிய அடியாகும்."கண்காணிப்பு மூலம் ஒடுக்குமுறை" எனும் பா.ஜ.க.வின் சித்தாந்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது,” என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

    இது தொடர்பாக டுவிட்டரில் பதிலளித்து உள்ள ரவிசங்கர் பிரசாத், 'காங்கிரஸின் அவசரகாலச் சட்டத்தின் போது, சிவில் உரிமைகள், ஊடக சுதந்திரம் மற்றும் நீதித்துறை சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளானது', என பதிலளித்துள்ளார்.

    Next Story
    ×