search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    X

    பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான கட்டமைப்பிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுத்துறை வங்கிகளை இணைப்புதற்கு மேற்பார்வைக் குழு உருவாக்கப்படும். இந்த குழுவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் இணைப்பு இந்த குழுவின் மேற்பார்வையில் நடைபெறும்.

    தற்போது எஸ்.பி.ஐ. தவிர்த்து 20 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. எஸ்.பி.ஐ. சமீபத்தில் தனது துணை வங்கிகளை இணைத்துக்கொண்டு மிகப்பெரிய ஒருங்கிணைந்த நிறுவனமாக மாறி உள்ளது.

    பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர் குழு இணைப்புக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், இணைப்பு குறித்து குழு முடிவெடுக்கும். இந்த முடிவுகள் வர்த்தகம் சார்ந்த முடிவுகளாக இருக்கும். இந்த குழுவை பிரதமர் மோடி அமைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட வங்கித்துறையின் சீர்திருத்தங்களுக்கு எதிராக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், அமைச்சரவையின் இந்த முடிவு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×