search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்: பனாஜியில் முதல்வர் பாரிக்கர் வாக்களித்தார்
    X

    மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்: பனாஜியில் முதல்வர் பாரிக்கர் வாக்களித்தார்

    பனாஜி, நந்தியாலா மற்றும் பவானா சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    கோவா மாநிலத்தின் பனாஜி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்வர் மனோகர் பாரிக்கர் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றார். அதேபோல், ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலா சட்டமன்ற தொகுதி மற்றும் டெல்லியில் உள்ள பவானா சட்டப்பேரவை தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகின்றது. 

    பனாஜி, நந்தியாலா, பவானா ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 
    பனாஜி தொகுதியில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வாக்குப் பதிவு தொடங்கிய உடனே வரிசையில் நின்று வாக்களித்தார்.

    நந்தியாலா இடைத்தேர்தல் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே கவுரவ பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் தெலுங்கு தேசம் கட்சியின் 9 அமைச்சர்கள் நந்தியாலாவில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும்  கர்னூலில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். 

    பவானா தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
    Next Story
    ×