search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசை விட பா.ஜ.க. ஆட்சியில் ரெயில் விபத்துகள் குறைந்துள்ளது: ரெயில்வே அமைச்சகம்
    X

    காங்கிரசை விட பா.ஜ.க. ஆட்சியில் ரெயில் விபத்துகள் குறைந்துள்ளது: ரெயில்வே அமைச்சகம்

    காங்கிரசை விட பா.ஜ.க. ஆட்சி செய்த கடந்த 3 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் குறைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனையடுத்து, நரேந்திர மோடி 2014-ம் ஆண்டில் பிரதமரான பின்னர் ரெயில் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததால் 27 ரெயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 259 பயணிகள் மரணமடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருந்தது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சி செய்த கடந்த 3 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் குறைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014-15-ம் ஆண்டில் 135 விபத்துகளாக இருந்தது 2015-16-ம் ஆண்டில் 107-ஆக குறைந்தது. 2016-17-ம் ஆண்டில் 104-ஆக மேலும் குறைந்துள்ளது. ரெயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளால் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 759 பேர் விபத்துகளில் உயிரிழந்தனர். இது இரண்டாவது ஆட்சியில் 938-ஆக அதிகரித்தது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 652 பேர் தான் பலியாகியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×