search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் சோகம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழப்பு
    X

    உ.பி.யைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் சோகம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழப்பு

    உத்தர பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ராய்ப்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 71 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திலும் அதேபோன்ற சோகம் ஏற்பட்டுள்ளது.

    ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நள்ளிரவில் சுமார் அரை மணி நேரம் ஆக்சிஜன் அழுத்தம் குறைவாக இருந்ததால் ஒரு மணி நேரத்திற்குள் மூன்று குழந்தைகளும் இந்திருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ராமன் சிங் உத்தரவிட்டுள்ளார். “குழந்தைகளின் இறப்பை ஏற்படுத்தும் எந்த பொறுப்பற்ற செயலும் மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். இவ்விவகாரத்தை கவனிக்க சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன். இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது,” என அவர் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆக்சிஜன் சப்ளையில் கவனக்குறைவாக இருந்த ஊழியரை கைது செய்துள்ளனர்.
    Next Story
    ×