search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான்: கழிப்பறை கட்டு, இல்லையேல் மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களை மிரட்டும் அதிகாரிகள்
    X

    ராஜஸ்தான்: கழிப்பறை கட்டு, இல்லையேல் மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களை மிரட்டும் அதிகாரிகள்

    ராஜஸ்தானில், கழிப்பறை கட்டவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் என அரசு அதிகாரிகள் மக்களை மிரட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. பிரதமராக பதவியேற்ற மோடி, ’சுத்தமான இந்தியா’ திட்டம் கொண்டு வந்தார். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டு விடும் என அறிவித்தார்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள காங்கிதலா என்ற கிராமத்தில், 19 சதவீத மக்களே தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டியுள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்தது.

    கழிப்பறை கட்டுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும், அந்த கிராமத்தினரில் பெரும்பாலானோர் இன்றும் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட கிராமத்துக்கு சென்றனர். மக்களிடம் கழிப்பறை கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் கேட்பதாக இல்லை.

    இதையடுத்து, ’நீங்கள் உங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும்’ என மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரித்துச் சென்றுள்ளனர். அதிகாரிகளின் இந்த மிரட்டலைக் கேட்டு, என்ன செய்வதென
    தெரியாமல் கிராம மக்கள் திகைத்து நின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முக்தானந்த் அகர்வால் கூறுகையில், ’இது சற்றே கடினமான உத்தரவு தான். ஆனாலும், இந்த உத்தரவு மக்களை கழிப்பறை கட்டுவதற்கு திசைதிருப்பும்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×