search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து - கோர்ட்டு உத்தரவு
    X

    கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து - கோர்ட்டு உத்தரவு

    ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதற்கு காரணம், அப்பெண்ணின் புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததுதான்.

    அவருக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில், 2015-ம் ஆண்டு அப்பெண் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதில், தனது புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்றும், கணவன்-மனைவிக்கென தனியறை இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.



    இதன் அடிப்படையில்தான் அப்பெண்ணுக்கு குடும்பநல கோர்ட்டு நீதிபதி ராஜேந்திர குமார் சர்மா விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், ‘அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் இருட்டும்வரை காத்திருந்து, பிறகு திறந்தவெளியில் உடல் உபாதைகளை கழிக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்களின் உடல்நிலை கெடுகிறது. வீட்டில் கழிப்பறை இருப்பது அவசியம். திறந்தவெளியில் மலம் கழிப்பது சமூகத்துக்கு அவமானம். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை‘ என்று கூறியுள்ளார். 
    Next Story
    ×