search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள தேர்தல்: 7 நகராட்சிகளையும் கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்
    X

    மேற்கு வங்காள தேர்தல்: 7 நகராட்சிகளையும் கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்காளத்தில் நாடியா, பிர்பும், தெற்கு தினாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் நாடியா, பிர்பும், தெற்கு தினாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. கூப்பர்ஸ் கேம்ப், நகல்காட்டி, புனியாட்பூர், துர்காபூர், பன்ஸ்குரா, ஹால்டியா, துப்குரி ஆகிய 7 நகராட்சிகளிலும் ஆளுங்கட்சி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இடதுசாரிகள் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.



    தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் தனது கட்சியினருக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×