search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும்: நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு
    X

    நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும்: நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

    நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு குடிமகனும் தன்னால் ஆன பங்களிப்பை செய்வார்கள் என நம்புவதாக நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னால் ஆன பங்களிப்பை நிச்சயம் செய்வார்கள் என நம்புகிறேன்.

    கடந்த காலங்களில் மந்திரிகள் சிபாரிசு செய்யப்படுபவர்களுக்கு தான் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. அதனை நீக்கி, இபபோது, யார் வேண்டுமானாலும் பத்ம விருதுக்காக மனு தாக்கல் செய்யலாம்.

    இப்போது நான் காணும் இளைய தலைமுறையினர் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன், அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி இளமையும், அனுபவமும் சேர்ந்து செயல்படுவது
    நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்கும்.

    மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்கிவிட முடியாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவை உருவாக்கிட முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×