search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாச்சல பிரதேசம்: தொங்கு பாலம் சரிந்து விபத்து - 22 பள்ளி குழந்தைகள் காயம்
    X

    அருணாச்சல பிரதேசம்: தொங்கு பாலம் சரிந்து விபத்து - 22 பள்ளி குழந்தைகள் காயம்

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் தொங்கு பாலம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 22 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.
    இடாநகர்:

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஜமுபானி அரசு ஆரம்ப பள்ளியில் கடந்த செவ்வாய் கிழமை சுதந்திர தினத்தன்று விழா கொண்டாடப்பட்டது. அப்பள்ளியில் இருந்து ஊருக்குள் செல்வதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்குள்ள தொங்கு பாலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் விழா முடிந்த உடன் மாணவர்கள் அனைவரும் தொங்கு பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது அதன் ஒரு முனை சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

    தகவல் அறிந்த மாவட்ட அதிகாரிகள் மீட்பு பணிகளை தொடங்கினர். மோசமான வானிலை காரணமாக அதிகமாக காயம் அடைந்தவர்களை மட்டும் இந்திய விமானப் படையினர் அசாம் திப்ருகர் ஆதித்யா மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்றனர். மற்ற மாணவர்களை சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவர்களில் ஒருவரின் நிலைமை மட்டும் மோசமாக இருப்பதாகவும், மற்ற மாணவர்களின் நிலைமை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மாநில முதல்-மந்திரி பீமா காண்டு உடனடியாக மீட்பு பணிகளை தொடங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் விரைந்து செயல்பட்டு மாணவர்களை காப்பாற்றிய அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×