search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை: மார்க்கெட்டில் தக்காளி திருடிய ஆசாமி கைது
    X

    மும்பை: மார்க்கெட்டில் தக்காளி திருடிய ஆசாமி கைது

    மராட்டிய மாநிலத்தில் உள்ள தஹிசார் மார்க்கெட்டில் தக்காளி திருடிய ஆசாமியை போலீசார் இன்று கைது செய்தனர்.
    மும்பை:

    இந்தியாவின் சில மாநிலங்களில் கடந்த மாதம் தக்காளி விலை தாறுமாறாக ஏறியது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. தக்காளி விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

    இதற்கிடையே, மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் சுமார் 700 கிலோ அளவுக்கு தக்காளி மாயமாகி போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் தஹிசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தக்காளியை திருடிய கும்பலை
    வலைவீசி தேடினர்.

    இந்நிலையில், தக்காளி திருடிய ஆசாமியை போலீசார் இன்று கைது செய்தனர்.
     
    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘தஹிசார் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து

    பார்த்தோம். அதில் குர்லா பகுதியை சேர்ந்த ராதேஷ்யாம் குப்தா(54), என்பவர் மார்க்கெட்டில் இருந்து தக்காளி திருடுவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தோம். மேலும், இதில் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×