search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் தலித் மக்கள் பற்றி மந்திரி விமர்சித்ததால் சர்ச்சை: உருவ பொம்மையை எரித்து போராட்டம்
    X

    ஆந்திராவில் தலித் மக்கள் பற்றி மந்திரி விமர்சித்ததால் சர்ச்சை: உருவ பொம்மையை எரித்து போராட்டம்

    மந்திரி ஆதி நாராயண ரெட்டியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அவரது உருவ பொம்மையை எரித்து ஆந்திரா முழுவதும் தலித் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    நகரி:

    ஆந்திர மாநிலம் நந்தி யாலா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத் தேர்தலுக்காக ஆந்திர மாநில மந்திரி ஆதி நாராயண ரெட்டி பிரசாரம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார்.

    இந்த நிலையில் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு பகுதியில் நடந்த டாக்டர்கள் கூட்டத்தில் பங்கேற்று மந்திரி ஆதி நாராயண ரெட்டி பேசினார்.

    அப்போது அவர் தலித் மக்களை விமர்சித்து பேசினார். சுதந்திரம் அடைந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் இட ஒதுக்கீடு தொடர்கிறது.

    அவர்கள் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்வாகி உயர்ந்த பதவிக்கு வந்து விடுகிறார்கள் என்று பேசினார். மேலும் தலித் மக்கள் பற்றி அவர் தரக் குறைவாக விமர்சித்ததாகவும் தெரிகிறது.

    மந்திரி ஆதிநாராயண ரெட்டியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தலித் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மந்திரி ஆதி நாராயண ரெட்டியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அவரது உருவ பொம்மையை எரித்து ஆந்திரா முழுவதும் தலித் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    Next Story
    ×