search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள பள்ளியில் தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத்
    X

    கேரள பள்ளியில் தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத்

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் இன்று கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    திருவனந்தபுரம்:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசிய தலைவர் மோகன் பக்வத் கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இங்குள்ள பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட கரங்கி அம்மன் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி மோகன் பக்வத் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதுதொடர்பான தகவல் வெளியானதும் அரசு உதவிபெறும் அந்தப் பள்ளியில் மோகன் பக்வத் தேசிய கொடி ஏற்ற பாலக்காடு மாவட்ட கலெக்டர் மரிகுட்டி தடை விதித்திருந்தார். சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட மரபுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சுதந்திர தின விழாக்களின்போது பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற முடியும் என்பதை மேற்கோள் காட்டி இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், அந்த தடையை மீறி இன்று காலை கரங்கி அம்மன் பள்ளிக்கு வந்த மோகன் பக்வத் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களிடையே உரையாற்றினார்.

    இந்தியாவுக்கு ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த அன்னிய அரசும் அவ்வளவு எளிதாக சுதந்திரத்தை தந்து விடவில்லை. 1857 முதல் 1947 வரை பல தலைவர்கள் அனைத்தையும் தியாகம் செய்து, பல சித்ரவதைகளை அனுபவித்து இந்த சுதந்திரத்தை நமக்கு போராடிப் பெற்றுத் தந்தனர்.

    நாட்டில் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்ந்து, அதே வகையில் நமது வாழ்க்கையையும் நாம் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். நமது சுதந்திரம் என்பது மிகவும் புனிதமானது, அதை நாம் அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
    Next Story
    ×