search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமுதாயத்தை பிளவுப்படுத்தும் சக்திகளை எதிர்த்து போராட வேண்டும்: சோனியா காந்தி சுதந்திர தின செய்தி
    X

    சமுதாயத்தை பிளவுப்படுத்தும் சக்திகளை எதிர்த்து போராட வேண்டும்: சோனியா காந்தி சுதந்திர தின செய்தி

    பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் சமுதாயத்துக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, வெறுப்புணர்வை தூண்டிவிடும் சக்திகளை எதிர்த்து போராட இந்திய மக்கள் முன்வர வேண்டும் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    முன்னதாக மக்களுக்கு விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:-

    பிரிவினைவாதம், தீவிரவாதம் உள்பட சமுதாயத்துக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, வெறுப்புணர்வை தூண்டிவிடும் அனைத்து சக்திகளையும் எதிர்த்து ஒருமித்த குரலில் போராட மக்கள் முன்வர வேண்டும்.


    சுதந்திரம் பெற்ற இந்தியர்களாக நான் அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்த நாடு மேம்பாட்டுப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்த 71-வது சுதந்திர நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான உரிய வாய்ப்புகளை பெற்று வளங்களுடன், நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×