search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம்: சுதந்தர தின விழாவில் மோடி பேச்சு
    X

    புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம்: சுதந்தர தின விழாவில் மோடி பேச்சு

    புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் என்று 71-வது சுதந்தர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

    பின்னர் மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.

    சவால்களை கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. இயற்கை பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலை சந்திப்பது வேதனை. ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் . விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள்.

    புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது.

    தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மற்றும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×