search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய இந்தியாவை உருவாக்க இணைந்து செயல்படுவோம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரை
    X

    புதிய இந்தியாவை உருவாக்க இணைந்து செயல்படுவோம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரை

    புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். தனது முதல் சுதந்திர தின உரையில் அவர் கூறியதாவது:-

    நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்படுவோம். 2022-ல், நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு பெறுகிறது.

    அரசு கொள்கைகளின் பயன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைய, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் ஆதரவு அளித்துள்ன. ஜி.எஸ்.டி. சட்டத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றது எனக்கும் மகிழ்ச்சியே. தூய்மை இந்தியா திட்டத்தை அரசு செயல்படுத்தும்போது மக்களும் நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேவைப்படும் நேரத்தில் நாம் அண்டை வீட்டாருக்கு உதவ வேண்டும். அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டாமல், சிறந்த கல்வி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×