search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி போராட்டம்
    X

    டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி போராட்டம்

    டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்று 29- வது நாளாக நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் அங்கு கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அமெரிக்க அரசாங்கம் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த தூதரகத்தில் இருந்தவர்களிடம் முறையிட்டனர்.

    மேலும் ஜந்தர் மந்தருக்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் இன்று விவசாயிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் இந்த போராட் டம் நடைபெற்றது. வாயில் பிளாஸ்திரி ஒட்டியவாறு அப்பகுதியில் விவசாயிகள் ஊர்வலமாகவும் சென்றனர்.

    Next Story
    ×