search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுள் கைதிகளுக்கு ஓராண்டு தண்டனை குறைப்பு: பஞ்சாப் முதல்வர் பரிந்துரை
    X

    ஆயுள் கைதிகளுக்கு ஓராண்டு தண்டனை குறைப்பு: பஞ்சாப் முதல்வர் பரிந்துரை

    நாட்டின் 70-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, சிறையில் உள்ள ஆயுள் கைதிகளின் தண்டனை காலத்தை ஓராண்டு குறைக்குமாறு பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், அம்மாநில கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
    சண்டிகர்:

    சுதந்திர தின விழா மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் போன்ற தினங்களில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாழ்ந்து வரும் கைதிகளின் நன்னடத்தை காரணமாக அவர்களது தண்டனை காலம் குறைக்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பஞ்சாப் சிறைகளில் வாழும் ஆயுள் கைதிகளின் தண்டனை காலத்தை ஓராண்டுக்கு குறைக்குமாறு, முதல்-மந்திரி அமரிந்தர் சிங், அம்மாநில கவர்னர் வி.பி.சிங் பட்னோருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ’’சுதந்திர தினத்தையொட்டியும், ஆயுள் கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டும் முதல்-மந்திரி இந்த பரிந்துரையை செய்துள்ளார்’’ என தெரிவித்துள்ளனர்.

    முதல்-மந்திரியின் பரிந்துரையை ஏற்று, கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்கும் அதிகாரம் மாநில கவர்னருக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×