search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    கொலை வழக்கில் குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

    2004-ம் ஆண்டு நிலத்தகராறில் நிலேஷ் ரையானி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வழக்கில் குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2004-ம் ஆண்டு நிலத்தகராறில் நிலேஷ் ரையானி என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜெயராஜ்சிங் ஜடேஜா உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வழக்கை விசாரித்த ராஜ்கோட் விரைவு கோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு ஜெயராஜ்சிங் ஜடேஜா உள்ளிட்ட 15 பேரையும் விடுவித்தது. சமீர் பதான் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு, ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

    விசாரணையில் நிலேஷ் ரையானியை சுட்டுக்கொன்றது ஜெயராஜ்சிங் ஜடேஜா என தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக மகேந்திரசிங் ராணா, அமர்ஜித்சிங் ஜடேஜா ஆகியோர் இருந்துள்ளனர். இதையடுத்து 3 பேருக்கும் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு நேற்று விதித்தது. சமீர் பதான் உள்ளிட்ட 13 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    ஜெயராஜ்சிங் ஜடேஜா, தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரசிங் ராணா, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். 
    Next Story
    ×