search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும் - முதல்வர் மெகபூபா வலியுறுத்தல்
    X

    காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும் - முதல்வர் மெகபூபா வலியுறுத்தல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மெகபூபா முஃப்தி வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதியுதவி உள்ளிட்ட சில சலுகைகளை அளித்து சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதற்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர். அங்கு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

    இந்நிலையில், குமாரி விஜயலட்சுமி ஜா என்பவர், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    காஷ்மீரில் 1957ம் ஆண்டு அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டபோது, அந்த சபையால் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் காலாவதியாகிறது என மனுதாரர் குறிப்பிட்டுள்ள அம்சம் தொடர்பாக ஆய்வுசெய்த நீதிபதிகள், மனுதாரரின் கேள்விக்கு 4 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மெகபூபா முஃப்தி வலியுறுத்தினார்.

    புத்காம் மாவட்டத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மற்ற மாநிலங்களை விட சிறப்பு அதிகாரத்தை அனுபவித்து வருவதாகவும், அதனை ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×