search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    91.29 சதவீத மக்கள் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்: தூய்மை இந்தியா திட்ட அறிக்கையில் தகவல்
    X

    91.29 சதவீத மக்கள் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்: தூய்மை இந்தியா திட்ட அறிக்கையில் தகவல்

    மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 3-ஆவது ஆண்டு அறிக்கையில், 91.29 சதவீத மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை பேணுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் 3-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு பேசினார்.



    அப்போது அவர் கூறுகையில், ‘தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதுதொடர்பாக 4,626 கிராமங்களில் உள்ள 1.4 லட்சம் வீடுகளில் சர்வே எடுக்கப்பட்டது. அதில், 62.45 சதவீதத்தினர் தங்கள்
    வீடுகளில் கழிப்பறை கட்டியுள்ளனர். அதில், 91.29 சதவீதத்தினர் கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

    மேலும், வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது’’ என கூறினார்.

    இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, உலக வங்கி 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×