search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உப்புமாவுக்குள் மறைத்து 1.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயற்சி - இருவர் கைது
    X

    உப்புமாவுக்குள் மறைத்து 1.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயற்சி - இருவர் கைது

    புனே விமான நிலையத்திலிருந்து உப்புமாவுக்குள் மறைத்து வைத்து 1.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை துபாய்க்கு கடத்த முயற்சித்த பெண் உள்ளிட்ட இருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மும்பை:

    புனே விமான நிலையத்தில் கடந்த ஞாயிறு அன்று துபாய்க்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த பயணிகள், தங்களது உடைமைகளை சோதனை செய்வதற்காக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அப்போது, நிஷாந்த் என்ற பயணியின் லக்கேஜ் வழக்கமான எடையை விட அதிகமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் நிஷாந்தின் பெட்டிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

    சுடச்சுட உப்புமா செய்து, அதை ஹாட் பாக்ஸில் வைத்து அதனுள் வெளிநாட்டு கரன்சியான அமெரிக்க டாலர் மற்றும் யூரோக்களை கவரில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து, நிஷாந்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    அதே விமானத்தில் செல்லும் மற்ற பயணிகளின் லக்கேஜ்களையும் தீவிர பரிசோதனை செய்ததில் ரங்லானி என்ற பெண்ணின் பெட்டியிலும் இதே போல் உப்புமாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.

    கைப்பற்றப்பட்ட கரன்சிகளின் மொத்த மதிப்பு 1.3 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், நிஷாந்த் மற்றும் ரங்லானி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×