search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்டு’
    X

    பள்ளி மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்டு’

    ஒடிசா மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பு தலைமை ஆசிரியையாக இருந்தவர் பாரதி மெகர்.

    இவர், வகுப்பு நடந்து கொண்டு இருந்த போது 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்து உடலில் மசாஜ் செய்ய சொன்னார். அதன் படி மாணவிகள் அவரது கை- கால் மற்றும் உடலை அமுக்கி விட்டனர். அவர் ஓய்வாக படுத்திருந்தார்.

    இந்த காட்சியை யாரோ ரகசியமாக படம் பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். இவ்வாறு 2 வீடியோ படங்கள் வெளிவந்தன.

    இந்த தகவல் மாவட்ட கல்வித்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி பிரமோத் பாண்டா நேரடியாக விசாரணை நடத்தினார்.

    அதில், மாணவிகளை ஆசிரியை பாரதி மெகர் மசாஜ் செய்ய வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இது சம்பந்தமாக ஆசிரியை பாரதி மெகரிடம் கேட்ட போது, எனக்கு அடிக்கடி தலைவலி வரும்.

    சம்பவத்தன்றும் அதே போல் வலி வந்தது. எனவே, அலுவலக அறைக்கு சென்று அமர்ந்து இருந்தேன். அப்போது நான் பாடம் நடத்தும் 8-ம் வகுப்பு மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். எனது நிலைமையை கண்டு அவர்களாகவே எனது தலையை பிடித்து விட்டு மசாஜ் செய்தார்கள்.

    நான் அவர்களை மசாஜ் செய்ய சொல்லவில்லை. நான் தலைவலியில் துடித்ததால் அவர்களாகவே இப்படி செய்தார்கள். யாரோ வேண்டும் என்று என்னை பழிவாங்கும் வகையில் இதை படம் பிடித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×