search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா-தினகரன் சந்திப்பு ரத்து
    X

    சசிகலா-தினகரன் சந்திப்பு ரத்து

    சென்னை எழும்பூர் கோர்ட்டில் நாளை அன்னிய செலாவணி தொடர்பான வழக்கில் தினகரன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பெங்களூரு பயணத்தை தினகரன் தள்ளி வைத்துள்ளார்.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று மாலை தினகரன் சந்திப்பதாக இருந்தது. இதற்காக சிறைத் துறை நிர்வாகத்திடம் அனுமதி பெறுமாறு கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி பிரமுகர்களுக்கு தினகரன் கட்டளை பிறப்பித்து இருந்தார்.

    நாளை சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி தொடர்பான வழக்கில் தினகரன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெங்களூரு பயணத்தை தினகரன் தள்ளி வைத்துள்ளார். இதனால் அவர் இன்று சசிகலாவை சந்திப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசியை அவரது மகன் விவேக் இன்று பிற்பகலில் சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி மறைவிற்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்து கலந்து கொண்டனர். எதிரும் புதிருமாக இருந்த திவாகரன், தினகரன் ஒன்றாக இணைந்து பேட்டி கொடுத்தது சசிகலாவுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அறிந்த சசிகலா குடும்பத்தினர் அனைவரும் இதேபோல ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தன்னுடன் உள்ள பெண் கைதி ஒருவரிடம் கூறியதாக சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தினகரனுடன் டாக்டர் வெங்கடேஷ் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர்களுக்கு ஆதரவாக சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×