search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-சீனா எல்லை பிரச்சனைக்கு நடுவே தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார் மெகபூபா முஃப்தி
    X

    இந்தியா-சீனா எல்லை பிரச்சனைக்கு நடுவே தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார் மெகபூபா முஃப்தி

    சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முஃப்தி, புத்த மத தலைவர் தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார்.
    ஜம்மு:

    இந்தியா சீனா இடையே சீக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சமீக காலமாக பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க இருநாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    பிரிக்ஸ் மாநாட்டின் நடுவே சீன அதிபர் மற்றும் அந்நாட்டு சக அதிகாரியை சந்தித்து இந்திய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் எல்லை பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முஃப்தி, புத்த மத தலைவர் தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார். ஜம்மு- காஷ்மீரின் லே நகரில் உள்ள புத்த மடாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

    அங்கு நடைபெற்ற புத்த மத வழிபாடுகளில் மெஹ்பூபா முஃப்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, இந்தியா-சீனா நாடுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டோக்லாம் விவகாரம் குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை விமர்சித்த தலாய்லாமாவிற்கு மெகபூபா பாராட்டினார்.
    Next Story
    ×