search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறை காரணமாக ரத்து செய்யப்படும் ரெயில்களின் எண்ணிக்கை பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிப்பு
    X

    வன்முறை காரணமாக ரத்து செய்யப்படும் ரெயில்களின் எண்ணிக்கை பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிப்பு

    நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்கள் ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு நேற்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. 2014-16 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரெயில்கள் ரத்து ஆவதாக மாநிலங்களவையில் ரெயில்வே துறை இணை மந்திரி ராஜன் கோகைன் தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 34 ஆக இருந்தது. இது 2015-ம் ஆண்டில் 540-ஆக உயர்ந்தது. பின்னர் 2016-ம் ஆண்டில் 1149-ஆக கிடுகிடுவென உயர்ந்தது.

    2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் என்ணிக்கை முறையே 2679, 8605, 9235 ஆகும். அதேபோல், வேறுபாதைக்கு மாற்றிவிடப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் முறையே 4056, 3585 மற்றும் 4048 ஆகும்.



    சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லாமல் மோசமான வானிலை, தாமதம், விபத்து, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வேலை காராணமாக ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    Next Story
    ×