search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்வானியிடம் ராகுல் காந்தி பேசியது என்ன? மக்களவையில் ஆச்சரியம்
    X

    அத்வானியிடம் ராகுல் காந்தி பேசியது என்ன? மக்களவையில் ஆச்சரியம்

    மக்களவையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி இருக்கைக்கு சென்று அவரிடம் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது. அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பீகார் விவகாரம் குறித்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என கோஷமிட்டனர். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இதுகுறித்து முறையான அறிவிப்பு கொடுத்தபின் பேச அனுமதி அளிக்கப்படும் என்றார்.

    இதைதொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து, அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதற்கிடையே, காலை 11.30 மணியளவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அவையில் இருந்தார். சிறிது நேரத்தில் அவர் முன்வரிசையில் பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகில் சென்றார். அவரது இருக்கையின் கீழ் வரிசையில் அமர்ந்த ராகுல், சிறிது நேரம் அத்வானியிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயிடமும் பேசினார்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி இருக்கைக்கு சென்ற ராகுல் அவரிடமும் சிறிது நேரம் பேசினார்.

    மக்களவையில் பீகார் ஆட்சி மாற்றம் தொடர்பான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய வேளையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் இருக்கைக்கு சென்று பேசியது அவையில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், ராகுல் காந்தியும், அத்வானியும் என்ன பேசினர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
    Next Story
    ×