search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. ஆதரவுடன் இன்று மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார் - நீதிமன்றத்தை நாட லாலு கட்சி முடிவு
    X

    பா.ஜ.க. ஆதரவுடன் இன்று மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார் - நீதிமன்றத்தை நாட லாலு கட்சி முடிவு

    பா.ஜ.க. ஆதரவுடன் இன்று மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்க அம்மாநில ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். ஆளுநரின் முடிவை எதித்து நீதிமன்றத்தை நாட லாலு கட்சி முடிவு செய்துள்ளது.
    பாட்னா:

    பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வசூலித்ததை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் உடனடியாக கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

    பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு மோடி தனது டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்தார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாட்னா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.



    இதுஒருபுறம் நடக்க, ஆளுநரை சந்திக்க ராஷ்டிர ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி நேரம் கேட்டிருந்தார். இன்று காலை 11 மணிக்கு சந்திக்க உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

    ஆனால், பா.ஜ.க. ஆதரவுடன் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க  நிதிஷ்குமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஷ்டிர ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் சிலருடன் தேஜஸ்வி ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றார். பின்னர், தேஜஸ்வி உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்களை மட்டும் பார்க்க ஆளுநர் அழைத்தார்.

    ஆளுநரிடம் சட்டசபையில் பெரிய கட்சியான தாங்களும் ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக ஆளுநரிடம் தேஜஸ்வி வலியுறுத்தினார். இருப்பினும், ஆளுநர் எதுவும் பிடிகொடுக்கவில்லை.



    இந்நிலையில், பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பது உறுதி ஆகி உள்ளது. முக்கிய திருப்பமாக பா.ஜ.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சுஷில் மோடி துணை முதல்வராக பொறுப்பேற்கிறார். இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய தேஜஸ்வி, “நிதிஷ்குமார் ராஜினாமா செய்தது, பதவியேற்பு நேரம் மாலை 5 மணியில் இருந்து காலை 10 மணிக்கு மாற்றப்பட்டது அனைத்தும் திட்டமிட்ட சதி. ஆளுநரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்.

    மெகா கூட்டணி 5 வருடம் ஆட்சி அமைக்கத் தான் பீகார் மக்கள் வாக்களித்தனர். சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட பெரும்பாலான ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாருக்கு எதிராக தான் வாக்களிப்பார்கள். பா.ஜ.கவுடன் செல்ல நான் ஒரு சாக்கு நிதிஷ்குமாருக்கு” என்றார்.

    Next Story
    ×