search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
    X

    மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு

    மராட்டிய மாநிலம் காட்கோபரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள 4 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி, இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் புரனமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், கட்டிடம் பலவீனம் அடைந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய அந்த நர்சிங் ஹோம் சிவசேனா தலைவர் சுனில் சிதபுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்றிரவு அவரை கைது செய்தனர். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.



    இந்நிலையில், மராட்டிய மாநில சட்டசபை இன்று காலை கூடியது. அப்போது, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், காட்கோபர் கட்டிட விபத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.

    அதைதொடர்ந்து, கட்டிட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×