search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி - நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
    X

    குஜராத் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி - நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

    குஜராத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமார் மோடி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.500 கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட குஜராத் பகுதியான பனஸ்காந்தா மற்றும் படன் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



    குஜராத் மாநிலத்திலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.



    வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கு  சென்ற பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்த்தார். பின்னர், குஜராத் மாநில வெள்ள பேரிடர் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடிக்கு மேல் வழங்கப்படும்  என்று அறிவித்த பிரதமர் மோடி,  வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்  வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
    Next Story
    ×