search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்திற்கு சொந்தமான 10000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: மத்திய அரசு தகவல்
    X

    ராணுவத்திற்கு சொந்தமான 10000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: மத்திய அரசு தகவல்

    நாடு முழுவதும் ராணுவத்திற்கு சொந்தமான நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே பதில் அளித்தார். அவர் பேசுகையில், “பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களில் தோராயமாக 10,220 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு முகமைகளால் இவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிசைவாசிகள் மற்றும் தனிநபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.



    தனியார் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 205 இந்திய நிறுவனங்களுக்கு 342 தொழிற்சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிட்டுள்ளபடி போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×