search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டர்: மத்திய அரசு, சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
    X

    சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டர்: மத்திய அரசு, சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

    போபால் மத்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற சிமி தீவிரவாதிகள் 8 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம் போபாலில் உள்ள மத்திய சிறையில் இருந்து தப்பித்த சிமி இயக்க தீவிரவாதிகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உறவினர் ஒருவர் இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து மத்திய அரசு, சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.

    முன்னதாக சிமி என்கவுண்ட்டர் தொடர்பாக மனுதாரர் மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×