search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள்: ராஜஸ்தான் மந்திரி தகவல்
    X

    பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள்: ராஜஸ்தான் மந்திரி தகவல்

    ராஜஸ்தானில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அம்மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மந்திரி ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் அனைவரும் சொந்த வீடு இருக்க வேண்டும் என அரசு உறுதி பூண்டுள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அம்மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மந்திரி ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரத்தோர் “கிட்டத்தட்ட 8.7 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், 1.6 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் அடுத்த 3 - 4 மாதங்களில் முடிவடைய உள்ளது. வீடுகள் கட்டுவதற்கு ரூ.1561 கோடி செலவிடப்படும். அதில் மத்திய அரசு ரூ.937 கோடியும் மீதியை மாநில அரசுகளும் கொடுக்க உள்ளது” என்றார்.
    Next Story
    ×